Editorial / 2019 மார்ச் 14 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
ஊர்காவற்றுறை - மெலிஞ்சிமுனை பகுதி மக்களுக்கு, ஏப்ரல் மாதத்தில் இருந்து, வரட்சி கால குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.ஜெயகாந்தன் தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், தீவகப் பகுதியில், வருடா வருடம் நிலவும் வரட்சியான வானிலை காரணமாக, அப்பகுதி மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில், பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் இந்நிலையில், குறித்த பகுதி மக்களால், தமது பகுதிக்கு வரட்சி கால குடிநீர் வசதியைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதனைக் கருத்திற்கொண்டே, முதற்கட்டமாக, ஏப்ரல் மாதம் முதல், குறித்த பகுதிக்கு வரட்சி கால குடிநீர் வசதியை, பவுசர்கள் மூலம் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.
9 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 Dec 2025