Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 25 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தால், ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியாதென, ஜனாதிபதியின் விசேட அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.
வவுனியா - வெளிக்குளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில், நேற்று (24) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காணாமற் போனவர்கள் என்று யாரும் இல்லை என்றும் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்றும் இல்லாவிடின் வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டார்கள் என்றும் நேரடியாகவே கூறியிருக்கிறாரெனச் சுட்டிக்காட்டிய பிரபா கணேசன், இப்படியான ஒரு நிலைமையில், காணாமற் போனவர்களுக்காக புதிய அலுவலகம் ஒன்றை அமைத்திருக்கிறார்களெனவும் குறிப்பிட்டார்.
இந்த அலுவலகத்தை, சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான கண்கட்டி வித்தையாகவே நான் பார்க்கின்றேனவெனத் தெரிவித்த அவர், இந்த அலுவலகத்தால், ஒருவரை கூட கண்டறிய முடியாதெனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago