Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (4) இரவு, கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு, இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், மன்னார் - புதுக்குடியிறுப்புக் கிராமத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான முஹம்மது நஜிபுதீன் (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தலைமன்னார்-மன்னார் பிரதான வீதி சின்னக்கருசல் பகுதியிலுள்ள புகையிரத வீதியிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று சனிக்கிழமை (5) காலை சடலத்தைக் கண்ட கிராம மக்கள் மன்னார் பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மன்னார் பொலிஸார், சடலத்தை மீட்டதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
07 Jul 2025