Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2016 ஜூன் 21 , மு.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு, முறிகண்டி பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞையைக் அவதானிக்காது கடக்க முற்பட்ட டிப்பர் வாகனம் ரயிலுடன் மோதியது.
செவ்வாய்க்கிழமை (21) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன், படுகாயமடைந்த லொறி சாரதி, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அக்கராயனில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு, முறிகண்டி பகுதியூடாக ஏ - 9 வீதிக்கு ஏற முயன்ற டிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
இதேவேளை, இந்த விபத்து காரணமாக ரயிலின் முன்பக்க கைபிடிகளும் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலிலேயே இந்த டிப்பர் மோதியுள்ளது. மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago