2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ரயில் கடவை கேற்றை தகர்த்துக் கொண்டு உள்நுழைந்த இ.போ.ச பஸ்

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா - மன்னார் வீதியில் காமினி வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள ரயில் கடவையை உடைத்துக் கொண்டு இ.போ.ச பஸ் உள்நுழைந்த நிலையில் ரயில் மற்றும் பஸ் சாரதிகளின் விரைவான செயற்பாட்டால் சுமார் 50 வரையிலான பயணிகள் தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வவுனியா - மன்னார் வீதியில் உள்ள காமினி வித்தியாலத்திற்கு அண்மையில் பயணித்த போது யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலுக்காக அப்பகுதியில் இருந்த ரயில் கடவைக் கேற் மூடப்பட்டுள்ளது.

எனினும் மூடப்பட்டதை அவதானிக்காத பஸ் பாதுகாப்பு கேற் ஒன்றினை உடைத்துக் கொண்டு ரயில் கடவை பாதைக்குள் நுழைந்தது. இதனை அவதானித்த ரயில் சாரதி ரயிலின் வேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்த அதேவேளை, சுதாகரித்த பஸ் சாரதி உடனடியாக பஸ்ஸை பின்பக்கமாக செலுத்தி விபத்திலிருந்து பஸ்ஸை காப்பாற்றினார். இதன்போது பஸ்ஸிலிருந்த 50 வரைலயிலான பயணிகளும் கூச்சலிட்டு பதறியடித்துஇறங்கி ஓடினர். இதன்பின் குறித்த ரயில் தொடர்ந்தும் பயணித்தது.

குறித்த குழப்ப நிலை தணிவதற்குள், மற்றொரு ரயில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி அதே வழித்தடத்தில் வந்துள்ளது. இதன்போது கடவைக் காப்பாளர் ரயில் கடவை கேற்றை மூடாது அசமந்தமாக இருந்துள்ளார். பயணிகள் ரயில் கடவையை கடந்து சென்று கொண்டிருந்ததுடன், வாகனங்களும் பயணித்துள்ளன. இந்நிலையில் அந்த வழித்தடத்தில் வந்த ரயில் ஒலிச் சமிஞ்ஞை ஒலித்தபடி வேகத்தை கட்டுப்படுத்தி ரயிலை நிறுத்தியமையால் மீண்டும் ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.

இச் சம்பவங்கள் தொடர்பில் சம்பவ இடத்துக்கு வந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இ.போ.சபை பஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .