2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ரவிகரன் மற்றும் 7 பேர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

சண்முகம் தவசீலன்   / 2019 ஜனவரி 07 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்துக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததுடன், மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, நீண்டநேரம் ஆகியும் திணைக்களத்துள் இருந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது இருந்ததாக தெரிவிக்கப்பட்டு திணைக்களம் சேதமாக்கப்பட்டது.

இவ்வாறு அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த 7 பேரும் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் இன்று (07) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .