Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 15 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
நீரிழிவு நோயாளர்களின் சர்க்கரை அளவையும் குருதி வகையையும் பரிசோதிப்பதற்குj; தேவையான குருதியைப் பெற்றுக் கொள்ளும் தானியங்கி ரோபோ இயந்திரத்தை கண்டுபிடித்த வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி றோகிதா புஸ்பதேவனின் குடும்பத்துக்கு, வவுனியாவில் வீட்டுத்திட்டமொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக, வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ன உறுதியளித்தார்.
வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ன, ஜனாதிபதியின் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டத்துக்கான இணைப்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து, வெலிஓயா மங்களராமய விகாரதிபதி கியூலேகெதர மங்கல தேரர், இந்து மதகுரு ரட்ணம் உள்ளிட்ட குழுவினர் இன்று (15), பாடசாலைக்குச் சென்று, குறித்த மாணவியைக் கௌரவித்தனர்.
இதன்போதே, அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.
அத்துடன், குறித்த மாணவியின் குடும்பநிலை தொடர்பாக கேட்டறிந்துகொண்ட வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ன, குறித்த மாணவியினதும் அவரது சசோதரியினதும் கல்வி நடவடிக்கைககு தேவையான வசதியைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
18 May 2025