2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வாக்குரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

George   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

ஜனநாயகத்தை நிலைநாட்ட வாக்குரிமையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள் வட மாகாணசபை போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'இலங்கையர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்திக்கொள்ள ஏற்கெனவே வாக்காளர்களை வாக்காளர் இடாப்பில் பதிவுசெய்யும் கால எல்லை கொடுக்கப்பட்டு அது நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களத்துடன் தொடர்புகொண்டபோது பெரும்பாலானோர் தமது பதிவை மேற்கொள்ளாமல் இருப்பதை அறிய முடிகின்றது.

எனவே அவ்வாறு பதிவுகளை மேற்கொள்ள தவறியவர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்பாக தத்தமது கிராம அலுவலகர்களைத் தொடர்புகொண்டு வாக்காளர் இடாப்பில் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.

அவ்வாறு பதிவுகளை மேற்க்கொள்ளுவதால் மாத்திரமே நமது ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கொண்டு எதிர்காலத்தில் நமது நாட்டின் சிறந்த ஆட்சியாளர்களை தீர்மானிக்கமுடியும்,
எனவே, தவறாது விசேடமாக வழங்கப்பட்டுள்ள குறித்த காலத்தினுள் அசட்டையாக விட்டுவிடாது பதிவுகளை மேற்கொள்ளுமாறு சகல மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்' என குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .