2025 ஜூலை 16, புதன்கிழமை

வீட்டுத்திட்டங்கள் இல்லாமல் தற்காலிக வீடுகளில் வாழ்ந்துவரும் மக்கள்

George   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாது தற்காலிக வீடுகளில் வாழ்ந்துவரும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தற்போது சொல்லணாத்துன்பங்களை அனுபவித்து வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறி எட்டு ஆண்டுகளாகிய போதும் சுமார் 14ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், நிரந்தர வீட்டுத்திட்டங்கள் எவையும் கிடைக்காத நிலையில் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றன.

குறிப்பாக, காணிகளுக்கான உரிமங்கள் இன்றியும் ஏற்கெனவே மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ் பிறிதொரு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் நீண்டகாலமாக குடியிருந்து வரும் குடும்பங்கள் என பல தரப்பட்ட குடும்பங்கள் இவ்வாறு வீட்டு வசதிகள் இன்றி கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றன.

இவ்வாறு தற்காலிக வீடுகளில் தங்கியுள்ள குடும்பங்கள் போதிய வசதிகள் இன்றியும் அடிக்கடி நிலவும் சீரற்ற காலநிலை அதிகூடிய வெப்பம் என்பவற்றால் சொல்லணாத்துன்பங்களை அனுபவித்து வருவதுடன் விஷ ஜந்துகளினது ஆபத்துக்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X