2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வீட்டுத்திட்டங்கள் குறித்து பேச்சு

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் மாவட்டச் செயலர்களுக்கும் இடையிலான  கலந்துரையாடலொன்று, நேற்றுத் திங்கட்கிழமை (15) இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்;துரையாடலில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் திட்டமிடல் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில், யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்டங்கள் தொடர்பாகவும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்;தீவு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்கள் மற்றும் கடந்த காலங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளையும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியிருந்;தமை தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .