2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வீதி போக்குவரத்து தொடர்பாக விழிப்புணர்வு

George   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகம், மன்னார் பொலிஸ் நிலையத்தின் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸ் அதிகாரிகளினால்  செவ்வாய்க்கிழமை(11) காலை மன்னாரில் நடாத்தப்பட்டது.

மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மன்னார் நகர சபை மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பில் கானொளி மூலம் காண்பிக்கப்பட்டதோடு, எவ்வாறு விபத்துக்கள் ஏற்படுகின்றது? அதனை எவ்வாறு தவிர்த்துக்கொள்ள முடியும், விபத்துக்களில் இருந்து எங்களை எவ்வாறு பாதுகாப்பது போன்ற பல்வேறு விடயங்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வீதி போக்குவரத்து தொடர்பாக கேட்கப்பட்ட  கேள்;விகளுக்கு உரிய பதில் வழங்கிய 3 மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து, மன்னார் நகரசபை பிரதான வீதியில் மாணவர்களுக்கு வீதி விபத்துக்கள் ஏற்படும் விதம் குறித்து வீதி நாடகம் மூலம் காண்பிக்கப்பட்டது.

குறிப்பாக பாதசாரிகள் வீதியில் எவ்வாறு நடந்து செல்ல வேண்டும், வாகான ஓட்டுனர்கள், சைக்கிள், முச்சக்கர வண்டி எவ்வாறு பயணிக்க வேண்டும், வீதியில் ஏற்படுகின்ற விபத்துக்களை எவ்வாறு தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு விடயங்கள் மாணவர்களுக்கு வீதி நாடகம் மூலம் காண்பிக்கப்பட்டன.

மாணவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், வைத்தியர்கள், கல்வித்திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .