Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2016 ஜூன் 04 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மறிச்சிகட்டியில் இருந்து வில்பத்து ஊடாக இலவங்குளம் செல்லும் பிரதான பாதை தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளமையினால் அப்பாதையூடாக புத்தளம் உற்பட ஏனைய இடங்களுக்குச் செல்லும் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மறிச்சிக்கட்டியில் இருந்து இலவங்குளம் வரை சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் கொண்ட குறித்த வீதி, கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, இந்த வீதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதனால் இந்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் பாதையூடாகச் செல்லும் செல்லும் மூன்று பாலங்கள் உடைந்து சேதமாகி உள்ளதாகவும் சில இடங்களில் மோட்டார் வண்டி கூட செல்ல முடியாத நிலையில் சேராக இருப்பதாகவும் பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த வீதியினூடான போக்குவரத்துக்கள் தொடர்ச்சியாக தடைப்படும் சந்தர்ப்பத்தில், வடக்கு முஸ்ஸீம்களின் மீள் குடியேற்றத்தில் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்படும் என்று வடக்கு முஸ்லிம்களின் மீள்குயேற்ற அமைப்பு கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .