2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்து: 19 பேர் காயம்

George   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 19 பேர் காயமடைந்த நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் தள்ளாடி  - திருக்கேதீஸ்வ ஆலயத்துக்கு அருகாமையில் இந்த விபத்து  ஏற்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து குஞ்சுக்குளம் பகுதிக்கு பயணித்த பட்டா ரக வாகனம், கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தலைகீழாக புரண்டுள்ளது.

குறித்த வாகனத்தில் பயணித்த மன்னார் சாந்திபுரத்தைச் சேர்ந்த உறவுக்காரர்களான 19 பேர் காயமடைந்தனர்.

இதில் 16 பேர் ஆண்கள், 3 பெண்கள் இரண்டு வயது பிள்ளைகள் உள்ளடங்குகின்றனர்.

விபத்து இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற மன்னார் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .