2025 ஜூலை 16, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; இருவர் காயம்

George   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

யாழ். போதானா வைத்தியசாலையின் பணிப்பாளரின் வாகனத்துடன் மோதுண்டு, ஒருவர் பலியாகியதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் பூநகரி, முட்கொம்பன் சந்தியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி ஊடாக பயணித்த யாழ். போதானா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனம், பூநகரி பரந்தன் பாதையிலிருந்து முட்கொம்பன் நோக்கிச் செல்வதற்கு திருப்பிய  போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியதுடன்  மேலும் இருவர் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்களுக்காக அதில் ஒருவர், யாழ். போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி  பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X