2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் 3 வயது சிறுவன் பலி

Niroshini   / 2016 ஜூலை 02 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டுபகுதியில் வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பச்சிளம் பாலகன்  உயிரிழந்துள்ளார்.

முன்பள்ளியிலிருந்து முச்சக்கர வண்டியில் வீடு வந்த சிறுவன் முச்சக்கர வண்டியை விட்டு இறங்கி வீடு சென்றுள்ளார்.

இதன்போது, தனது பொருளொன்றை முச்சக்கரவண்டியில் தவறவிட்டு அதை எடுப்பதற்காக மீண்டும் முச்சக்கரவண்டியை நோக்கி சென்ற போது எதிரே வந்த  வாகனத்துடன் மோதுண்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந் சிறுவன் உடையார்கட்டை பகுதியைச் சேர்ந்த காந்தரூபன் தர்சன் (வயது 3) என்பவராவார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை  புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .