2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வீர வசனம் பேசிய தமிழ்த் தலைமைகள் எங்கே?

Niroshini   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதவி கிடைக்கும் முன் வீரவசனம் பேசிய தமிழ்த் தலைமைகள் எவரும் பதவி கிடைத்தவுடன் மக்கள் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை என பத்ரமுல்ல சீலரத்தின தேரர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து உலருணவு பொருட்களை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு  கூறினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

நான், இனவாதம்பேசவில்லை. பாதிக்கப்பட்ட உங்களின் நிலை தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு வருவேன். உங்களுக்கு உதவி செய்யுமாறு பேசுவேன். நாம் அனைவரும் ஒரு நாட்டை சேர்ந்தவர்கள், இனவாதம் பேசவேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஆனால், உங்களது வாக்குகளால் மக்கள் பிரதிநிதிகளாக்கப்பட்டவர்கள் உங்களுக்கு உதவ வேண்டும்.

டக்ளஸ் தேவானந்தா, உங்கள் வாக்குகளால் நாடாளுன்றம் சென்றவர். அவர் உங்களை இன்று வரை சந்திக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர், தமக்கு எதிர்க்கட்சி தலைமை பதவி வழங்கப்படவில்லை என்று இனவாதம் பேசினார். இன்று பதவி கிடைத்தவுடன் அமைதியாக இருக்கின்றார். அவரும் இன்று வரை உங்களை வந்து சந்திக்கவில்லை என்றார்.

இன்று அரசியலில் உள்ளவர்களின் உறவினர்கள் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களா? யாருடைய உறவினராவது யுத்தத்தில் உயிரிழந்துள்ளார்களா? அக்காலத்தில் அரசியல்வாதிகள், சுகபோகக வாழ்க்கையை அனுபவித்தார்கள். இன்று யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த நீங்கள் இன்று மீண்டும் இழப்பினை சந்தித்துள்ளீர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .