Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
George / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
“முல்லைத்தீவு கடல்பகுதியில் சுமார் 800 இற்கும் மேற்பட்ட வெளிமாவட்ட மீனவர்களின் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால், மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என, மீனவ அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ள 73 கிலோமீற்றர் நீளமான கடற்கரையோரப்பகுதியில், சுமார் 4500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட இந்தக் கடற்றொழிலாளர்கள், மீள்குடியேறி தமது வாழ்வாதாரத் தொழிலைச்செய்து வரும் நிலையில், வெளிமாவட்ட மீனவர்களால் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
“இவ்விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடியும் இதுவரை எந்தவித தீர்வுகளும் கிடைக்கவில்லை” என, சுட்டிக்காட்டியுள்ள முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசம், “மீனவர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்ப்பதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் கூட இந்த விடயத்தை கையாள முடியாதுள்ளது” எனவும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சட்டவிரோத தொழில்களால் தங்களது வாழ்வாதாரத்தொழில்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவில் செயற்பட்டு வரும் 18க்கும் மேற்பட்ட மீனவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago