2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

Niroshini   / 2016 நவம்பர் 11 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கல்லாறு கிராமத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு, புதன்கிழமை (09) கல்லாறு தமிழ் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கல்லாறு கிராமத்தில் தற்போது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகளவில் காணப்படுவதாகவும் இதனால் இப்பகுதியில் பெண்கள் சிறுவர்கள் பாதுகாப்பாக வாழமுடியாத நிலை காணப்படுவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனைவிட கசிப்பு உற்பத்தி விற்பனைகளில் சிறுவர்கள் ஈடுபட்டு வருகின்றமை அதிகளவில் காணப்படுகின்றது. அண்மையில் கல்லாறுப்பகுதியில் வைத்து 25 போத்தல் கசிப்புடன் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .