2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வாழ்வின் எழுச்சி சந்தை

Kogilavani   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் வவுனியா மாவட்ட வாழ்வின் எழுச்சி சந்தை நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தலைமையில் நடைபெற்ற இச்சந்தையில் 4 பிரதேச செயலகத்தை சேர்ந்த உற்பத்தியாளர்கள்  பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில்,  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வாழ்வின் எழுச்சி திணைக்கள வவுனியா மாவட்ட பணிப்பாளர் திருமதி பத்மரஞ்சன் மற்றும் திணைக்கள தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .