Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 செப்டெம்பர் 09 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில், இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இன்று மேற்கொள்ளப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இன்று (9) காலை 8.00 மணிமுதல் இந்த பரிசோதனைகள் ஆரம்பமாகின.
விஷ ஊசி விவகாரம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை 2ஆம் திகதி, முதல் கட்டமாக முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், யாழ். மாவட்டத்தில் 9 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேரும், வவுனியா மாவட்டத்தில் 3 பேருமாக 26 பேர் மருத்துவ பரிசோதனைகளை செய்துகொண்டனர்.
எனினும், மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற மருத்துவ பரிசோதனையில் யாரும் பங்கேற்கவில்லை.
இன்றயதினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் மருத்துவப் பரிசோதனையில் முன்னாள் போராளிகள் சிலர், கலந்துகொண்டதை காணமுடிந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago