Niroshini / 2020 நவம்பர் 02 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
கொழும்பில் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட நபருடன் மன்னார் - வங்காலை பகுதியில் தொடர்பில் இருந்தவர்களுக்கும், முசலி பகுதியில் கொழும்பு மற்றும் மேல் மாகாணங்களில் இருந்து வந்து தங்கி இருந்தவர்களுக்கும், நாளை (03) பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.
அத்துடன், மாந்தை மேற்கு மூன்றாம் பிட்டி பகுதியிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன எனவும், அவர் கூறினார்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், மன்னார் மாவட்டத்தில், தற்போது வரை 1,083 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 12 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.
தற்போது தொற்று உடையவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற அடிப்படையிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் இருந்து இங்கு வந்து தங்கி இருந்த நிலையில் 173 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், வினோதன் கூறினார்.
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago