2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு - கிழக்கில் மேலும் 3,000 வீடுகள்

George   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு - கிழக்கு மக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், மேலும் மூவாயிரம் வீடுகளை வழங்க ஜரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது.

இதற்கான கலந்துரையாடலொன்று, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.  

இந்நிலையில், வடக்கு - கிழக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் இருந்து, வீட்டுத் திட்டப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, இந்த வருட இறுதிக்குள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த  தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிதிகளும் கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .