2025 ஜூலை 05, சனிக்கிழமை

வடக்கைச் சேர்ந்த 587 வீதிகளுக்கான 1327.64 கி.மீ புனரமைப்பு

George   / 2016 ஜூன் 23 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாணத்தைச் சேர்ந்த 587 வீதிகளை புனரமைப்புக்கு உட்படுத்த, நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், 1327.64 கிலோமீற்றர் வீதிகள் புனரமைப்புக்கு உட்படுத்தப்படவுள்ளன. 

நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்க்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் ஆலோசனையின் பிரகாரம், மேற்படி வீதிகளை அபிவிருத்திக்கு உட்படுத்துவதற்கான வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாரச்சி மற்றும் வட மாகாண சபையின் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ஆகியோரால், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 

ஒருங்கிணைந்த கிராமிய மேம்பாட்டின் கீழான, வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழேயே, இந்த 587 வீதிகளைச் சேர்ந்த 1327.64 கிலோமீற்றர்கள் அபிவிருத்திக்கு உட்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .