Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
போர் முடிந்து பன்னிரெண்டு வருடங்களாகியும் இன்னமும் யுத்த சூழல் போன்று தான் வடக்கு, கிழக்கு காணப்படுகின்றது என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த 16ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் பகுதியில், தீர்த்தக்கரை என்னும் இடத்தில் இராணுவ முகாம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கின்றதென்றார்.
இந்த இராணுவ முகாம் யுத்தம் முடிந்து கடந்த பன்னிரெண்டு வருடங்களாகியும் தொடர்ந்தும் இன்னமும் அந்த இடத்திலே தான் முகாம் இருக்கின்றது எனத் தெரிவித்ண அவர், அந்த முகாம் அமைந்திருக்கின்ற பகுதியால் தினமும் பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடல்தொழிலுக்கு சென்று வருகிறார்கள் எனவும் கூறினார்.
இந்த நிலையில், அந்த முகாமுக்கென மக்களின் காணியை, மக்களினது விருப்பங்களுக்கு மாறாக சுவீகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிவித்த அவர், அந்த நேரத்தில் தான், கடந்த 16 ஆம் திகதியன்று சென்று காணியை அளவிட வரும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை நடத்தியிருந்த்தாகவும் கூறினார்.
ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு அளவீடு தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்ந அவர், மேற்கொண்டு ஏதும் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், பருத்தித்துறை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பின்னரே தான் முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட கூடாதனது தெரிவித்த அவர், "போர் முடிந்து பன்னிரெண்டு வருடங்களாகியும் இன்னமும் யுத்த சூழல் போன்று தான் வடக்கு, கிழக்கு காணப்படுகின்றது. இலங்கையிலே இருக்கிற 20 பிரிவு படைகளிலே 16 பிரிவு படைகள் வடக்கு, கிழக்கிலே நிலை கொண்டிருக்கின்றன" எனவும் கூறினார்.
"அதிலும், வடமாகாணத்திலே 13 பிரிவுகளக் படைகள் வடமாகாணத்திலே நிலை கொண்டிருக்கின்றன. தொடர்ந்தும் இராணுவத்துக்காக காணி சுவீகரிக்கின்ற நடவடிக்கைகள் தான், படை தரப்பில் இருந்து அரசாங்க தரப்பில் இருந்து முன்னெடுக்கபடுகின்றன. நாங்கள் இவற்றை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த படைகள் இந்த மண்ணில் இருந்து விலத்தி கொள்ளபட வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு" என, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .