எஸ்.என். நிபோஜன் / 2018 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வண்டில் சவாரி மாட்டை வெட்டி இறைச்சியாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த தர்மபுரம் பொலிஸார், மற்றொருவர் தப்பியோடிவிட்டார் என்றும் தெரிவித்தனர்.
தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியிலேயே மேற்படி சம்பவம், நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
வண்டில் சவாரிக்கு பயன்படுத்தப்பட்ட மாடொன்றை, வீடொன்றில் வைத்து திருட்டுத்தனமாக வெட்டி, இறைச்சியாக்கப்படுவதாக, தமக்குக் கிடைத்த தகவலையடுத்தே, அப்பகுதிக்கு விரைந்து, தேடுதல் நடத்தியதாக தெரிவித்தனர்.
அந்த வீட்டிலிருந்து மாட்டின் எச்சங்கள் மீட்கப்பட்டதுடன் இறைச்சி கைப்பற்றப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்த தர்மபுரம் பொலிஸார், தப்பியோடிய நபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
5 minute ago
11 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
21 minute ago