2025 மே 22, வியாழக்கிழமை

வண்ணாங்குளம் அபிவிருத்தி

Editorial   / 2019 மே 07 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - மாந்தைகிழக்கு அம்பாள்புர கிராம அலுவலர் பிரிவிலுள்ள வண்ணாங்குளம், சுமார் ரூபாய் ஐந்து கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

இதற்கான நிதியை வன்னி மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா அகிய இருவரும் வழங்கியுள்ளனர்.

குறித்த குளம் பல வருடங்களாக அபிவிருத்தி செய்யப்படாமல் தூர்ந்துபோய் இருந்தமையால், கிராமத்தில் வசித்து வரும் 260க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபடமுடியாத நிலைக்குத்தள்ளப்பட்டிருந்தனர்.

விவசாயத்தையே, வாழ்வாதாரமாகக் கொண்ட இவர்கள் தூர இடத்துக்குச் சென்று விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களுக்கு குளத்தைச் சுற்றி சொந்தக் காணிகள் இருந்தபோதும் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு தண்ணீர் வசதி இல்லாமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் கவனத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, குளத்தை அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்ள் 5 கோடியே 50 இலட்சம் ரூபாவை பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்ட நிதியிலிருந்து வழங்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X