Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
வன்னி மண் அடங்கிவிட்டதாக யாரும் தப்புக்கணக்குப் போடாதீர்களெனத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், இன்று கொக்கரித்துக்கொண்டு பழைய இருண்ட யுகத்தைக் எடுத்துக்கொண்டு வர சிலர் துடித்துக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.
ஒட்டுசுட்டான் – கற்சிலைமடுவில், நேற்று (25) நடைபெற்ற மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இறுதிப் போரின் போது, தமிழீழ விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிப்பு செய்தார்களெனவும் ஆனால் அவர்கள் அடிமண்டியிட்டு அடங்கிப்போகவில்லையெனவும் கூறினார்.
எனவே, வன்னி மண் அடக்கிவிட்டதாக யாரும் தப்புக்கணக்கு போடாதீர்கனெவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், எது எப்படி இருந்தாலும், தேர்தல்களில், தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லையெனத் தெரிவித்த அவர், எனவே, பண்டாரவன்னியனின் வரலாறுகளை இல்லாமல் செய்வதற்காக எத்தனையோ மாற்றங்கள் தற்போது அரசியல் ரீதியில் நடந்துகொண்டிருப்பதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025