2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வயோதிபர்களை குறிவைக்கும் திருட்டுக் கும்பலைத் தேடி பொலிஸ் வலைவீச்சு

Gavitha   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

முழங்காவில், பல்லவராயன் கட்டு சோலை பகுதியில் உள்ள வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை நுழைந்த  திருடர்கள், கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.

வீட்டிலிருந்த கணவன், மனைவி ஆகியோரை மிரட்டி, வீட்டிலிருந்த பணம் மற்றும் நகை என்பவற்றை திருடர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

4 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 36 பவுண் தங்க நகை என்பன இவ்வாறு கொள்ளைடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முகத்தை துணியால் மறைத்துக் கட்டியபடி உள்நுழைந்த திருடர்கள் அலைபேசியை அடித்து நொருக்கியுள்ளனர். பின்னர், வீட்டிலிருந்தவர்களை மிரட்டி பணத்தனைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

மேலும், சனிகிழமை நள்ளிரவு 11 மணிக்கு ஜெபுரம் தெற்குப்பகுதியில்  உள்ள  வீடொன்றில் நுழைந்த  திருடர்கள் இதேபோல்  வீட்டில் இருந்த கணவன், மனைவி ஆகியோரை அடித்து  மிரட்டி இரண்டரைப்பவுன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்

எனினும் நடைபெற்ற திருட்டுக்களும் ஒரே வகையாக இருப்பதனால் இரண்டுக்கும் தொடர்பிருக்குமா அல்லது வெவ்வேறு  திருட்டுக்கும்பல்களாக  இருக்குமா என்ற சந்தேகத்தில்  கிளிநொச்ச, முழங்காவில் , நாச்சிக்குடா பொலிசார்  ஒன்றாக இணைந்து பல கோணங்களில்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

அதுமாத்திரமின்றி கடந்த செவ்வாய்க்கிழமையும்  இதேபாணியில் கிளிநொச்சி முரசுமோட்டை  பழையகமம்  பகுதியில் உள்ள வீடொன்றில் வீட்டில் இருந்த வயதான தம்பதியர்களை மிரட்டி   வீட்டிலிருந்த  20,000 பணம் மற்றும் ஐந்தரைப் பவுன் நகைகள்  என்பவற்றை திருடிச் சென்ற சம்பவம் ஒன்றும்  இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .