Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 நவம்பர் 01 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.அகரன்
வவுனியா, இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள இலத்திரனியல் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில், நேற்று திங்கட்கிழமை மதியம் 11.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தினால், போட்டோ கொப்பி இயந்திரம், புகைப்படக் கருவிகள் உள்ளிட்ட பொருட்கள், தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
காலையில், வர்த்தக நிலையத்தை திறந்த அதன் உரிமையாளர், சிறிது நேரத்தின் பின், வர்த்தக நிலையத்தைப் பூட்டி விட்டு, உறவினர் ஒருவரின் மரணச் சடங்குக்கு சென்ற நிலையிலேயே, தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அருகிலிருந்த பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த முற்பட்டபோதும், வர்த்தக நிலையத்தில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமான நிலையலேயே, தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின்சார ஒழுக்கின் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை, பொலிஸார் எவரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
07 Jul 2025