2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வரட்சி காரணமாக சிறுகுளங்களில் நீரில்லை

George   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா மாவட்டத்தில் கடந்த நாட்களில் நிலவிய கடும் வரட்சி காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள 350 சிறிய குளங்கள், முழுமையாக வரண்டு போயுள்ளதுடன் பெரிய குளங்களில் நீரின் மட்டம் குறைவடைந்துள்ளது.

வருடாந்தம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மழை பெய்யும் நிலையில், இந்த வருடம் வானம் கறுமை நிறத்தில் மாத்திரமே உள்ளதுடன் மழை பெய்யவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்தாலும் வவுனியாவில் மப்பும் மந்தாரமுமான காலநிலை நிலவுவதுடன் மழை பெய்யவில்லை என பிரதேச வாசிகள் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .