2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வரட்சியிலும் அக்கராயன் திறந்துவிடப்பட்டுள்ளது

Thipaan   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

தற்போது நிலவும் வரட்சியான காலநிலையிலும், கண்ணகைபுரம் மேட்டுப்பயிர்ச் செய்கைக்காகவும் கால்நடைகளின் குடிநீருக்காகவும் கிளிநொச்சி அக்கராயன் குளத்தின் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வரட்சியை எதிர்கொண்டுள்ள கிராமங்களில் அக்கராயன் கிராமஅலுவலர் பிரிவும் ஒன்றாகும். அக்கராயன் மத்தி, மேற்கு, கெங்காதரன் குடியிருப்பு ஆகிய பகுதிகள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன.

இந்நிலையில் அக்கராயன்குளம் தற்போது திறந்து விடப்பட்டுள்ளதன் காரணமாக வரட்சியினை எதிர்கொண்டுள்ள மக்கள் குளிப்பதற்கு இக்குளநீரை பயன்படுத்தக் கூடியதாகவுள்ளதாதத் தெரிவித்தனர்.

அக்கராயன் பிரதேசத்தில் சுமார் 5,000 கால்நடைகள் உள்ளமையினால் அதன் குடிநீருக்கும் கண்ணகைபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேட்டுப் பயிர்ச் செய்கைக்கும் இக்குள நீர் பயன்படுகின்றது.

ஏப்ரல் மாதத்தில் பெய்த பெருமழையினால் அக்கராயன்குளம் நிரம்பி வான்பாய்ந்தமையினால் அக்கராயன் குளத்தில் திறந்து விடக்கூடியளவிற்கு நீர் மட்டம் தற்போது காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .