Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் - நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட இராசமடுப் பகுதியில் உள்ள மக்கள் மேட்டுநிலப் பயிர்ச் செய்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனினும் கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக , தோட்டப் பயிர்ச் செய்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த கிராமத்தில் அதிகளவான தோட்டங்களில் கத்தரிச் செடி பயிரிடப்பட்டுள்ளது. மழை இல்லாத காரணத்தால், கிணற்றில் இருந்து நீர் இறைப்பதன் மூலமே செடிகள் வளர்க்கப்படுகிறது.
ஆனால் செடிகளில் அதிகளவான பூக்கள் பூப்பதில்லை. செடியில் ஆகக் குறைந்தளவு காய்களே காணப்படுகிறது. இதற்கான காரணம் மழை இன்மையே. எவ்வளவுதான் நீர் இறைத்தாலும் இடையிடையே மழை பெய்ய வேண்டும். அப்போது தான் செடி பசுமையாகவும் அடர்த்தியாகவும் வளர்வதுடன் அதிகளவாக காய்க்கும் தன்மை கொண்டிருக்கும் என கத்திரி செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மழை இல்லாமல் வறட்சியாக நிலங்கள் இருப்பதால் ஒன்றை விட்டு ஒரு நாள் நீர் இறைக்கின்றோம் .
செடி வளர்ச்சி குன்றி காய்கள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் வரட்சி காரணமாக கத்திரி செய்கை மிகவும் பாதிக்கப்படுவதாகவும் கத்திரி செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago