2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வரட்சி காரணமாக நன்னீர் மீன்பிடியிலும் பாதிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -மு.தமிழ்ச்செல்வன்.   

கடும் வரட்சி காரணமாக குளங்களின் நீர்ட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக நன்னீர் மீன்பிடியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.

தற்போது நீர் வற்றியுள்ளமையால் மீன்பிடியில் நேரடியான பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை எனவும் இவ்வாறு வரட்சி தொடர்ந்தால் அடுத்த ஆண்டில் மீன்பிடியில் பாரிய பாதிப்பு ஏற்படும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான சூழ்நிலைக்கு அடுத்த படியாக இரணைமடு குளத்தில் காணப்படும் முதலைகளின் அச்சுறுத்தல் தமக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக இரணைமடு நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குளத்தில் காணப்படும் முதலைகளுக்கு அப்பால் வெளி இடங்களில் பிடிக்கப்படும் முதலைகள் இங்கு கொண்டுவந்து விடப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த முதலைகளால் தமக்கு அச்சுறுத்தல்கள் பலமுறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் பல தரப்பட்டவர்களிற்கு எடுத்து கூறியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என, மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .