2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

வரட்சியால் 35 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

Yuganthini   / 2017 ஜூலை 09 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

வரட்சி காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில், 35,730 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, முல்லைத்தீவு மாவட்டச் செயலக புள்ளி விவரம் தெரிவிக்கின்றன.

“மாவட்டத்தின் முக்கிய குளங்களான முத்தையன்கட்டுக் குளம், வவுனிக்குளம் உட்பட பல சிறு குளங்களிலும் சிறுபோக நெற்செய்கை இடம்பெறவில்லை. பல கிராமங்களில் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டு பிரதேச செயலகங்களினால் திரட்டப்படுகின்ற விவரங்களின் அடிப்படையில் குடிநீர் விநியோகத்தை பிரதேச சபைகள் மேற்கொண்டு வருகின்றன.

“குளங்களில் நீர் மட்டம் அடி மட்டத்தை சென்றதை அடுத்து, ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் பல கிராமங்களில் கிணறுகளின் நீர் மட்டம் அடி நிலையை அடைந்ததன் காரணமாக, முத்தையன்கட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த மேட்டுப் பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டு, குளிப்பதற்குக் கூட நீண்ட தூரங்களுக்கு மக்கள் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்” எனவும், அத்தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .