2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மில்.129 ரூபாய் வைப்பில்

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா மாவட்டத்தில், வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடாக, 129 மில்லியன் ரூபாய் காப்புறுதிப்  பணம், அரச வங்கிகளூடாக வைப்புச் செய்யப்பட்டு வருவதாக, வவுனியா மாவட்டக் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின்  உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்தார்.   

இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர்,

வரவு - செலவுத் திட்டத்தின் கீழ், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட காப்புறுதித் திட்டம் மற்றும் ஏனைய திட்டங்களின் மூலமே, குறித்த பணம் வைப்புச் செய்யப்பட்டு வருவதாக, அவர் தெரிவித்தார்.

அதனடிப்டையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட காலப்பகுதியில், 675 ரூபாய் கட்டுப் பணம் செலுத்தி, காப்புறுதிச் செய்திருந்த 2149 விவசாயிகளுடைய 5,535 ஏக்கர் நெற்​ச் செய்கை அழிவடைந்துள்ளதாவும் அவர்களுக்கு  நட்டஈடாக 80 மில்லியன் 4 இலட்சத்தி 9362 ரூபாய், வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

அதேபோல், உரமானியத்தைப் பெற்று, கட்டணம் செலுத்தாது, இலவசக் காப்புறுதிக்கு விண்ணப்பித்திருந்த 2,735 விசாயிகளின் 6,885 ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்திருந்த நிலையில், அவர்களுக்கு நட்டஈடாக 39 மில்லியன் 3 இலட்சத்து 35,851 ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதாவும்
இதற்கு மேலதிகமாக, வங்கி கடன் மூலம் காப்புறுதிச் செய்த 119 பேரினது 586 ஏக்கர் பயிர் அழிவுகளுக்காக 52 இலட்சத்து 19,730  ரூபாய் வழங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில், உழுந்து பயிர்ச் செய்கைக்கும் காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியிருந்ததாகத் தெரிவித்ததுடன் அதற்காக 347 விவசாயிகள் காப்புறுதி செய்திருந்தாகவும் அவர்களுடைய 441 ஏக்கர் பயிர் அழிவுக்காக 35 இலட்சத்து 19,693 ரூபாய் நட்டஈடாக வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இவர்களுக்கான பணம், அரச வங்கிகளூடாக, பாதிக்கப்பட்டவர்களது கணக்குக்கு வைப்பிலிடப்பட்டு வருவதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில், 2017, 2018ஆம் ஆண்டுகளில், 15 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நெற்ச்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X