2025 மே 09, வெள்ளிக்கிழமை

’வருமானம் வேண்டுமானால் கடற்கரைக்கு வாருங்கள்’

Niroshini   / 2021 ஜூலை 04 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

பிரதேச சபையின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, முல்லைத்தீவு நகர சந்தைக்கு மீன்களை எடுத்து செல்ல முடியாதெனத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் மரியதாஸ்  பிறெட்ரிக் ஜோன்சன் தெரிவித்துள்ளார். 

அத்துடன், பிரதேச சபை தமக்கு வருமானம் அதிகரிக்க வேண்டுமானால், கடற்கரைக்கு வந்து வரிகளை அறவிடுங்கள் என்றும், அவர் கூறினார்.

கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், நகர சந்தைக்கு மீன்கள் கொண்டுவரப்பட்டால் சபைக்கு அதிக வருமானம் கிடைக்குமென தெரிவித்தமை குறித்து வினவிய போதே. முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் மரியதாஸ்  பிறெட்ரிக் ஜோன்சன், இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  கடற்றொழிலாளர்கள் கடலில் இருந்து திரும்பி, கள்ளப்பாடு வடக்கு, தெற்குக்குரிய பொதுச் சந்தையிலும் சிலாவத்தை, தீர்த்தக்கரை ஆகிய பகுதிகளுக்குரிய தீர்த்தக்கரை பொதுச் சந்தையிலும், தற்போது மீன்களை விற்பனை செய்கின்றார்கள் என்றார்.

இந்நிலையில், முல்லைத்தீவு நகரச் சந்தைக்கு, அனைத்து மீன்களும் கொண்டு வரப்படுவதன் மூலம் பிரதேச சபை வருமானம் அதிகரிக்கும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாதெனத் தெரிவித்த அவர், காரணம், இரண்டரை கிலோமீற்றர் தூரம் வரை கடலில் இருந்து கரைக்குத் திரும்பும் கடற்றொழிலாளர்களால், முல்லைத்தீவு நகருக்கு மீன்களை கொண்டு செல்ல முடியாதெனவும் கூறினார்

அத்தடன், முல்லைத்தீவு நகரச் சந்தைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளும் இல்லை எனத் தெரிவித்த அவர், இந்நிலையில் அருகில் உள்ள சந்தைகளிலேயே, கடற்றொழிலாளர்கள் மீன்களை விற்பனை செய்கிறார்கள் என்றும் கூறினார்.

'பிரதேச சபை தமக்கு வருமானம் அதிகரிக்க வேண்டுமானால், மேற்குறிப்பிட்ட சந்தைகளுக்கு பிரதேச சபையின் வரி வசூலிப்பாளர்களை நியமித்து வரிகளை பெற்றுக் கொள்ளலாம். அல்லது, கடற்கரைக்கு வந்து வரிகளை அறவிடுங்கள்' என, மரியதாஸ்  பிறெட்ரிக் ஜோன்சன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X