Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 பெப்ரவரி 11 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டத்தில், எதிர்வருகின்ற வாரம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மன்னார் மாவட்டத்தில் எவ்வாறு வெற்றிகரமாக செயற்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தலைமையில், இன்று (11) காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இதில் 30 மற்றும் 60 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கும் அடுத்த வாரமே கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பான பெரிமுறைகள் ஆராயப்பட்டுள்ளதென்றார்.
அதே நேரம் இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago