2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

வர்த்தகர்களுக்கு அபராதம்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு நகரை அண்மித்த பகுதியில், காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய இரண்டு வர்த்தகர்களுக்கு, தலா 5,000 ரூபாய் வீதம் அபராதம் விதித்து, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சம்சுதீன், இன்று (12) உத்தரவிட்டார்.

முல்லைத்தீவு நகரை அண்மித்த பகுதியில், பொதுசுகாதார பரிசோதகர் ஆ.சுரேஸ்சானந்தன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய இரண்டு வர்த்தகர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இருவரையும் நீதீமன்றத்தில் ஆஜர்படுத்தியப் போது, நீதவான் அவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், கடும் எச்சரிக்கையும் விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .