Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2016 ஜூலை 13 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
வடமராட்சியையும் தென்மரட்சியையும் இணைக்கும் வறணி - திராலி இணைப்பு வீதியின் புனரமைப்பு வேலைகள், சம்பிரதாய பூர்வமாக வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனால், இன்று புதன்கிழமை (13) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் தவராசா, வீதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் சிவயோகம், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன், கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் பெலிசியன், உதவி பிரதேச செயலாளர், முன்னாள் பிரதேச சபையின் தவிசாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமய தலைவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.
கடந்த வருடம் வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரினால், வடமாகாண சபையின் உறுப்பினர்கள் 38 பேருக்கும் 6 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கமைவாக, குறித்த வறணி - திராலி வீதியானது, வடமாகாண சபை உறுப்பினர் அகிலதாஸினால் முன்னுரிமைப்படுத்தப்பட்டதன் அடிப்படையில், இவ்வீதியின் வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அதுமட்டுமல்லாது, அவ்வீதியில் அமைந்துள்ள தில்லையம்பலப் பில்ளையார் கோவிலின் தர்மகர்தாக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோவில்வரை வீதியை புனரமைத்து தருமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, மேலும் 2 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு, மொத்தமாக 8 மில்லியன் ரூபாய்களுக்கான வேலை நடைபெற இருக்கின்றது. இவ்வீதியானது 4.5 கிலோமீற்றர் தூரமுடையது. இதில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைக்கொண்டு 1.5 கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
4 hours ago