2026 மே 02, சனிக்கிழமை

வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் சிறுவர் நாள் நிகழ்வு

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் சிறுவர் நாள் நிகழ்வு இடம்பெற்றது. இதில் விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் கலந்துகொண்டதுடன், மேலும் பாடசாலைக்கென தமிழர் பண்பாட்டு இசைக்கருவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலையின் முதல்வர் திரு.கணபதிப்பிள்ளை திருக்குமரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது, பாடசாலையின் பிரதான மண்டகத்தில் நேற்று (01) இடம்பெற்றது.
தொடர்ந்து சிறுவர்களது கலை நிகழ்வுகள், விருந்தினர் உரைகள் மற்றும் வடமாகாணத்தால் நடத்தப்பட்ட கிராமிய நடனப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றமைக்கான சான்றிதழ்கள் மற்றும் கிண்ணங்கள் என்பன சிறுவர்களுக்கு வழங்கப்பட்டன.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .