Editorial / 2018 ஜூன் 21 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பிரதான பாலத்தடி கடற்பகுதியில், இன்று (21) காலை மீன் பிடிக்கச்சென்ற மீனவர் ஒருவரின் வலையில், பிள்ளையார் சிலை ஒன்று சிக்கிய நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
மீனவர் ஒருவர், இன்று (21) காலை மீன்பிடிக்கக் கடலில் போட்டிருந்த வலையை, கடலில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தார். இதன்போது, அந்த வலையில் மர்மப்பொருள் ஒன்று சிக்கிய நிலையில், குறித்த மீனவர், அதை மீட்டு, கரைக்குக் கொண்டுசென்றார்.
இதன்போது, குறித்த மர்மப்பொருளில் உள்ள மண்ணை அகற்றிப் பார்த்தபோது, அது பிள்ளையார் சிலையெனத் தெரியவந்துள்ளது.
குறித்த பிள்ளையார் சிலை பழைமை வாய்ந்ததா அல்லது அண்மைக் காலங்களாக மன்னாரில் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சிலையா என்பது தொடர்பில், மீனவர்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது.
28 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
51 minute ago
2 hours ago
2 hours ago