2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வவுனிக்குளத்தின் கீழ் 11 ஆயிரம் ஏக்கரில் செய்கை

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின், வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 12 நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் 11 ஆயிரத்து 283 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தாண்டு (2016 – 2017 ஆண்டுக்கான) காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனிக்குளம் நீர்ப்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்; வெளியிட்டுள்ளது.

அதாவது, வவுனிக்குளத்தின் கீழ் 6060 ஏக்கர் நிலப்பிரப்பிலும், கோட்டைகட்;டியகுளத்தின் கீழ் 405 ஏக்கர் நிலப்பரப்பிலும், அம்பலப்பெருமாள் குளத்தின் கீழ் 623 ஏக்கரிலும், புத்துவெட்டுவான் மருதன்குளத்தின் கீழ் 450 ஏக்கரிலும், தென்னியன்குளத்தின் கீழ் 850 ஏக்கரிலும், மல்லாவிக்குளத்தின் கீழ் 325 ஏக்கரிலும், கல்விளான்குளத்தின் கீழ் 400  ஏக்கரிலும், பனங்காமம் குளத்தின் கீழ் 300 ஏக்கரிலும், கொல்லவிளான் குளத்தின் கீழ்; 262 ஏக்கரிலும், ஐயன்கன்குளத்தின் கீழ் 952 ஏக்கரிலும், தேறாங்கண்டல் குளத்தின் கீழ் 300 ஏக்கரிலும், பழைய முறிகண்டி குளத்தின் கீழ் 356 ஏக்கரிலும் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

காலபோக நெற்செய்கைக்காக விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .