2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வவுனிக்குளத்தில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு

Editorial   / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சண்முகம்  தவசீலன்

மரணவீட்டில் கலந்துகொள்ள வந்த சகோதரர்கள் இருவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தில் நீராட சென்றிருந்த நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

   மல்லாவி பகுதியில் புதன்கிழமை (26)  இடம்பெற்ற மரணவீட்டில் கலந்துகொள்ள யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இருந்து கலந்து கொண்ட சகோதரர்கள்    வவுனிக்குளம் குளத்தில் நீராட சென்றிருந்தனர்.

​அவர்களில், ரவிச்சந்திரன் சுரேஸ் என்ற 16 வயது சிறுவன் துரிசு பகுதியில் நீரில் மூழ்கியுள்ளார். மூழ்கிய தம்பியை  காப்பாற்ற சென்ற ரவிச்சந்திரன் சுமன் ( வயது 27) என்ற சகோதரனும்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

உயிரிழந்த இருவரது உடலஙகளும் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இருவரது உடலங்களையும் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அவர்கள் வருகைதந்து பார்வையிட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .