2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வவுனியா அகதிகள் நீர்கொழும்புக்குத் திரும்பினர்?

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா - பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர், நீர்கொழும்புக்குத் திரும்பிகொண்டு இருப்பதாக, புனர்வாழ்வு நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக, நீர்கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்த 113 பேர் வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

இதில், ஒருதொகுதியினர் தமது சுயவிருப்பின் காரணமாக, அண்மையில், வவுனியாவிலிருந்து நீர்கொழும்பு முகாமுக்குச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் ஐவர் மாத்திரமே பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தாங்கி இருந்தனர். அவர்களும் தமது சுயவிருப்பில் செல்ல விரும்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்று (08) காலை சென்றுள்ளதாக, புனர்வாழ்வு நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X