Editorial / 2019 மார்ச் 18 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா இ,போ.சவினருக்கும் தனியாருக்கும் இடையே இணைந்த நேர அட்டவணை மற்றும் இணைந்த சேவை தொடர்பாக நிலவி வந்த பிரச்சினை தொடர்பாக வவுனியா நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு இடம்பெற்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று வவுனியா இ.போ.சவினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இ.போச பஸ்கள் அனைத்தும் வவுனியா சாலையில் தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இதன் காரணமாக அரச ஊழியர்கள், பாடசாலை செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டும் இ.போ.சவினர் தெரிவிக்கையில்,
எமக்கு தனியாருடன் இணைந்த சேவை தொடர்பாக பிணக்கு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்று நீதிமன்றத்தின் மூலம் குறிப்பிட்ட காலம் வரை பரிட்சார்த்த ரீதியாக இணைந்த நேர அட்டவனையின் படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்தின் பின்னரும் சில பிரச்சினைகள் நடைபெற்றமையால் நீதிமன்றத்தால், இப்பிணக்குத் தீர்க்க முடியாது என கூறப்பட்டதுடன், பெப்ரவரி 28ஆம் திகதியன்று, இணைந்த சேவையை இரத்து செய்து முன்னர் எவ்வாறு இயங்கினீர்களோ அவ்வாறே இயங்குமாறு கடிதம் மூலம் எமக்கு பணிக்கப்பட்டது.
அதன் பின்னர் இணைந்த நேர அட்டவனை பிரிக்கப்பட்டு தனித்தனியே கடந்த இருதினங்களாக செயற்பட்டு வந்தோம். இந்நிலையில், நேற்று பொலிஸாருடன் தனியார் வந்து இணைந்து சேவை செய்யுமாறு வற்புறுத்தி எங்களது பஸ்கள் தரித்து நிற்பதற்கு இடம்பில்லாமல் பல பிரச்சினைகளை ஏற்படுத்தினர். இதன் காரணமாக நேற்று சகல பஸ்களும் வவுனியா சாலைக்குள் கொண்டு செல்லப்பட்டன.
நாங்கள் இதுவரை நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாகவே எமது சேவையை செய்து வந்தோம். மேலும் நீதிமன்றத்தின் கட்டளையை புறக்கனித்து அதனை எதிர்க்கும் முகமாக தனியாரும் ஒரு சில பொலிஸாரும் ஈடுபட்டமையினாலேயே எமது சேவையை இடைநிறுத்தி எமது போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.
பஸ் நிலையம் தொடர்பான சரியான தீர்வு வரும் வரை எமது போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.
12 minute ago
23 minute ago
30 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
30 minute ago
49 minute ago