Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க. அகரன்

வவுனியா கணேசபுரம், மரக்காரம்பளை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
வவுனியா குளுமாட்டுச்சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞர் எதிரே வந்துகொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றது.
இவ்விபத்தில் படுகாயமைடந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற நெளுக்குளம் பொலிசார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை மேற்கொண்டதோடு, விபத்துடன் தொடர்புடைய ஏனைய இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களான இளைஞர் ஒருவரையும், பெண் ஒருவரையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மரணமடைந்த இளைஞன் பண்டாரிக்குளத்தினை சேர்ந்த ஸ்ரீரஞ்சன் (வயது – 32) எனப் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
19 minute ago
19 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
19 minute ago
26 minute ago