2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வவுனியா குழந்தை கடத்தல்; மேலும் 8 பேர் கைது

Editorial   / 2018 ஜூன் 09 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் அண்மையில் தாயுடன் இருந்த குழந்தையை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில், மேலும் 8 பேரை வவுனியா பொலிஸார், நேற்று (08)  கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், ஏற்கெனவே, இரு பெண்கள் மற்றும் ஆணொருவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் 8 பேரை நேற்று (08)  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் 6 பேர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் முல்லைத்தீவு மற்றும் வவுனியாவை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பிரகாரம், குழந்தையை கடத்துவதற்காக குழந்தையின் தந்தை, வவுனியாவைச் சேர்ந்த நபரினூடாக பண பேரம் பேசியதாகவும் குழந்தையை கடத்தி வைத்திருந்த இரு பெண்களுக்கும் 90 ஆயிரம் ரூபாய்  வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோருக்கு தலா 5,000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், குழந்தையை இந்தியாவுக்கு கடத்தி செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விசாணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்துவதற்கு வவுனியா பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், இதுவரை 13 பேர் கைது செய்ய்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X