2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வவுனியா சதொசவில் வாடிக்கையாளர் மீது தாக்குதல்

Editorial   / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருள்களைக் கொள்வனவு செய்யச் சென்றவர் மிது அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “வவுனியா நகர்ப் பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்துக்கு பொருள்களைக் கொள்வனவு செய்ய சென்ற வாடிக்கையாளரொருவர், அங்குள்ள பொருள்களின் விலைகள் தொடர்பில் கடமையில் இருந்த ஊழியரிடம் கேட்டுள்ளார்.

இதன்போது, ஊழியருக்கும் வாடிக்கையாளருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், வாடிக்கையாளர் மீது ஊழியர் தாக்கியுள்ளார்.

இதன்காரணமாக, வாடிக்கையாரின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் விடயம் தொடர்பில் சதொச முகாமையாளாரிடம் கேட்டபோது, “மேலிடத்து உத்திரவின்றி தாம் கருத்துக் கூற முடியாது” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .