2025 மே 05, திங்கட்கிழமை

வவுனியா நகர சபையின் பட்ஜட் நிறைவேற்றம்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 19 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று காலை நடை பெற்றது.

இதன்போது அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட அறிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அது எந்தவித எதிர்ப்பகளும் இன்றி, வாக்கெடுப்பில்லாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வரவு- செலவுத் திட்டத்தினை ஐக்கியதேசிய கட்சியின் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) உறுப்பினர் எம்.லறீப் முன்மொழிய சுதந்திரக் கட்சி உறுப்பினரான ஜ. கனிஸ்டன்  வழிமொழிந்திருந்தார்.

தமிழர் விடுதலை கூட்டணி வசம் இருக்கும் வவுனியா நகர சபை வரவு-செலவுத்திட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X