Niroshini / 2021 ஜனவரி 06 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா நகரின் முக்கிய பகுதிகள், இன்று (06) காலை திடீரென முடக்கப்பட்டுள்ளன.
வவுனியா - பட்டானிச்சூரை சேர்ந்த இருவருக்கு, திங்கட்கிழமையன்று (04), கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டது.
குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பது, நேற்று (05) கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பட்டாணிசூர் பகுதியில், நேற்ற முன்தினம் (05) இரவு, இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
பட்டாணிசூர் பகுதியைச் சேர்ந்த பலர், வவுனியா பசார் வீதி, நகரில் வியாபார நிலையங்களை நடத்திவருவதுடன், ஊழியர்களாகவும் பணியாற்றிவருகின்றனர்.
அதனை கருத்தில் கொண்டு, இன்றுக் காலை, வவுனியா பசார் வீதியின் ஒருபகுதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதிகள் என்பன முற்றாக முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு, சுகாதார பிரிவினரால் முதற்கட்டமாக பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு வருகின்றன.
இதேவேளை குறித்த வீதிகளுக்கு தமது தேவை நிதித்தம் பயணித்த பொதுமக்கள், அடையாள அட்டைகள் பரிசீலிக்கப்பட்டு, பட்டாணிசூர் பகுதியை சேராதவர்கள் பொலிஸாரால் வெளியில் விடுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025
14 Nov 2025